• Apr 18 2026

கப்பு முக்கியம் பிகிலு! வெளியானது அஜித்குமார் "கார் ரேஸிங்" புதிய அப்டேட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, மார்க் ஆண்டனி என்ற ஹிட் படம் கொடுத்த, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரையில் இப்படத்தின் அப்டேட் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.


சினிமாவை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸில் ஈடுபாடு கொண்டிருக்கும் அஜித், முன்னணி நடிகர் என எந்த பந்தாவும் இல்லாமல் உலக பைக் சுற்றுப் பயணம் செய்ததுடன், தன்னைப் போன்ற பைக் பிரியர்களுக்கு வழிகாட்டுவதற்காக வீனஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது.


இந்த நிலையில், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கார் ரேஸ், பைக் ரேஸில் கலந்து கொண்டு வரும் அஜித், துபாயில் நடக்கவிருக்கும் கார் ரேஸில் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் பந்தய அணியை அவர் தொடங்கியிருக்கிறார்.


இந்த நிலையில் ஐரோப்பாவில் நடக்கவுள்ள 24 எச் கார் ரேஸில் அஜித்தின் அணி பங்கேற்க இருப்பதாக சில மாதங்களாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகே இன்று வெளியாகியுள்ளது. போட்டியில் அஜித் அணி நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement