• Aug 08 2025

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 'காக்கா முட்டை', 'கனா', 'செக்கச்சிவந்த வானம்' உள்ளிட்ட திரைப்படங்களில் பாரம்பரிய அழகு, விவசாயக் குடும்ப பெண் மற்றும் ஒழுக்கமான பெண்மணி எனப் பசுமை நிறைந்த கேரக்டர்களில் திகழ்ந்த இவர், தற்போது ஒரு புதிய ட்ரான்ஸ்ஃபர்மேஷனில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


இணையத்தில் தற்போது வெறித்தனமாக வைரலாகிப் போன வீடியோ ஒன்றில், மாடர்ன் லுக்கில், ஸ்டைலிஷ் உடையுடன், க்யூட்டான போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது உண்மையிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் தானா?” என்று வாயடைத்து நிற்கின்றனர்.


இணையத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, ஒரு பிரபல புகைப்பட கலைஞரின் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், கறுப்பு உடை, மென்மையான மேக்கப், பொலிவான அலங்காரம் மற்றும் நேர்த்தியான ஃபேஷன் என மாடர்ன் லுக்கில் தோன்றியுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் “அக்கா இது நீங்கள்தானா? அசத்துறீங்க!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement