• May 17 2025

பெயர் தெரியாத கோழைகளை விளாசித் தள்ளிய நடிகை திரிஷா! வைரலான இன்ஸ்டா பதிவு...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுக் கொண்டுள்ள நடிகை திரிஷா, தற்போது தனது சமூக ஊடகப் பதிவால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமீர் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, கடந்த இரண்டு தசாப்தங்களில் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இப்பொழுதும் முன்னணி நடிகையாக திகழ்கின்றார்.

தற்போது அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருக்கும் திரிஷா, இந்த படத்தின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் சூழலில், தற்பொழுது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் நபர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.


தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "சமூக ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள் தனமான விஷயங்களை பதிவிடும் டாக்சிக் மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்கிறீர்களா? உண்மையில் பெயர் தெரியாத கோழைகள். உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாரா?." என்று கேட்டுள்ளார்.

இந்தப் பதிவில், திரிஷா தனது கோபத்தையும், மன வேதனையையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். குறிப்பாக, 'பெயர் தெரியாத கோழைகள்' என்ற வார்த்தை மூலம், முகம் தெரியாமல் பிறரை அவமதிக்கும் சமூக ஊடக பயனர்களை நேரடியாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement