• May 26 2025

"ஜனநாயகன் " பட டீம் என்னை ஏமாத்திட்டாங்க..! நடிகை சனம் ஷெட்டி வருத்தம்...

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.


இந்த நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். குறித்த பதிவில் விஜயின் இறுதி படமான "ஜனநாயகன் " படக்குழுவை பகிரங்கமாக திட்டியுள்ளார்.


குறித்த பதிவில் "ஜனநாயகன் டீம்ல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்குற ஒருத்தரை தளபதியோட கடைசி படம் ஆச்சே அவர் கூட நடிக்கிற ஆசை இதுக்கு அப்புறம் நிறைவேறாதே என்கிற ஒரு நம்பிக்கையில ஒரு ஆறு மாசமாக வாய்ப்புக்காக பாலோ பண்ணிட்டு இருக்கேன். வாய்ப்பு இருக்கு, ஓகே ஆயிடும் என்றுதான் அவர் சொல்லிட்டே இருந்தார். தப்பான வகையில் அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், என்னை அலைய வைத்திருக்கிறார்கள் என்று இன்னைக்கு தான் எனக்கு தெரிய வருது. இப்போ கேட்டா, அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் சொல்கிறார்கள். ஏன் இப்படி அலைய வைக்கிறீங்க என்று கேட்டதற்கு, நான் உங்கள ரெபர் பண்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று சொல்றாங்க. மார்க்கெட் வேல்யூ இல்லாத ஹீரோயின் என்பதால் இப்படி அலைய விடுவீங்களா? இந்த பாரபட்சம்தான் எனக்கு பிரச்சனை. தளபதி விஜய்க்கு இந்த விஷயம் தெரிய வர வாய்ப்பே இல்லை. அதனால் அவர்தான் எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என மிகவும் மனவருத்தத்துடன் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement