• Aug 29 2025

நடிகை இலியானா இரண்டாவது முறையும் தாயானார்...! வைரலாகும் இன்ஸ்டா பதிவு...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா டி குரூஸ், தற்போது இரண்டாவது முறையாக தாயானார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமான இலியானா, பின்னர் 'நண்பன்' படத்தில் நடிகர் விஜயுடன் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு அல்லாமல் ஹிந்தி (பாலிவுட்) சினிமாவிலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்த இலியானா, ஒரு புகைப்படக் கலைஞருடன் லிவ்-இன் உறவில் இருந்தார். பின்னர் அவர் தனது வாழ்க்கை துணைவர் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினார். அவரது கணவர் மைக்கேல் டோலன், ஒரு வெளிநாட்டவர். அவர்களுக்கான முதல் பிள்ளை ஆண் குழந்தைக்கு "கோவா பீனிக்ஸ்" என்று பெயர் சூட்டினார் என்றும் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.


தற்போது, இரண்டாவது முறையாக தாயானதாகபோவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்த குழந்தைக்கு "கியானு ரோஃப்" என பெயரிடப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள்   பதிவிட்டு வருகின்றனர். 








Advertisement

Advertisement