• Apr 21 2026

நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வைரல் பேட்டி!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் இவர், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தனது எதிர்கால ஆசைகளை பகிர்ந்து கொண்டார்.


அப்போது, “என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நான் நடித்துவிட்டேன். ஆனால் முழுமையான காமெடி படத்தில் இதுவரை நான் நடித்தது இல்லை. நான் நடித்த சில படங்களில் சிறிய அளவில் நகைச்சுவை இருந்தாலும், முழுக்க காமெடி மையமாக இருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு நல்ல காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றும், அது எப்போது நிறைவேறும் என்பதை காத்திருக்கிறேன் என்றும் கூறினார். ஆண்ட்ரியாவின் இந்த நேர்மையான பதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாக தீவிரமான மற்றும் வலுவான கதாபாத்திரங்களில் அதிகமாக தோன்றும் ஆண்ட்ரியாவை, நகைச்சுவை கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement