• Apr 18 2026

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா போல் பிரகாஷ் ராஜூம் விலகிவிட்டாரா.? விளக்கமளித்த நடிகர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அடுத்ததாக, நடிகர் பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.


அதாவது, பிரகாஷ் ராஜ் திடீரென ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும், கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இதற்கு முன்பு நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல்களுடன் இந்த செய்தியும் இணைத்து பேசப்பட்டது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் ஆரம்பம் முதலே பல காரணங்களால் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில்,“தீபிகா விலகியது போல் தற்போது பிரகாஷ் ராஜும் கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.” என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த தகவல் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தானே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அதன்போது, “என் காட்சிகளை இன்னும் படமாக்கவே தொடங்கவில்லை. அதற்குள் வாட்ஸ்அப் பேக்டரி கதைகளை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.” என்று கூறி, பரவி வரும் செய்திகள் அடிப்படையற்றவை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement