• Apr 27 2026

அமீர் கானையே அழ வச்சிட்டாங்களே.!! பாலிவுட்டிலும் கலக்கும் சாய் பல்லவி.!

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி  ரசிகர்களின் மனதை கவர்ந்த சாய் பல்லவி, கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

அடிப்படையில் மருத்துவரான இவர், கவர்ச்சியை தவிர்த்து தனக்கென தனி பாணியில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தமிழில் தியா, மாரி 2, கார்கி, அமரன் என பல படங்களில் நடித்த சாய் பல்லவி, குறிப்பாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த அமரன் படத்தில் தனது நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து தனுஷ் ஜோடியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளது.

தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள சாய் பல்லவி, அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ஏக் தீன் மற்றும் ராமாயணா படங்களில் நடித்து வருகிறார். அமீர்கான் புரொடக்ஷன் தயாரித்துள்ள ஏக் தீன் படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


2016ல் தாய்லாந்தில் வெளியான ஒன் டே படத்தின் ரீமேக்கான இது, பாலிவுட்டில் சாய் பல்லவிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுக்கும் என திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வெளியான டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தனது மகன் ஜுனைத் கான் நடித்துள்ள 'ஏக் தின்' படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ஆனந்த கண்ணீர்  வடித்துள்ளார் நடிகர் அமீர் கான். மேலும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார் சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement