• May 14 2026

இங்கிலீஷ் படிக்க போன முத்து–மீனாவிற்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.! டுடே எபிசோட்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும் மீனாவும் பிளான் செய்து அண்ணாமலையின் போனிலிருந்து விஜயாவுக்கு மிஸ்டு கால் அடித்து விட்டு வைக்கின்றனர்.

இதை பார்த்த விஜயா, தனக்கு அண்ணாமலை கால் செய்ததாக நினைத்து சந்தோஷத்தில் எடுத்துப் பேசுகின்றார். இதைப் பார்த்து அண்ணாமலையும் விஜயா தான் கால் செய்ததாக நினைத்து அவரும் பேசுகின்றார்.

அதன்படி இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் அண்ணாமலை, ஸ்ருதி வீட்டார் உன்னை எப்படி கவனிக்கிறார்கள்? அவர்களுடைய சாப்பாடு எல்லாம் உனக்கு ஓகேவா இருக்கா என்று கேட்கின்றார்.


அதற்கு விஜயா “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, “அதற்காக இங்கேயே இருக்க முடியாது, முத்து–மீனாவை விரைவில் அந்த வீட்டை மீட்கச் சொல்லுங்கள்” என கூறுகின்றார். அண்ணாமலையும் “அதற்காகத்தான் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று பதிலளிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் ஆங்கிலம் கற்பதற்காக செல்கின்றனர். அங்கு ஸ்வேதா ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து, தான் அங்கு பாடம் நடத்தப் போவதாக தெரிவிக்கின்றார். அதன்படி அவர்கள் ஆங்கிலம் கற்க தொடங்குகின்றனர். அவர்களுடன் முருகனும் ஆங்கிலம் கற்க வருகிறார். இதுவே இன்றைய எபிசோட்டின் முக்கிய அம்சமாகும்.


Advertisement

Advertisement