• May 15 2026

ஆதி கொடுத்த தரமான பர்த்டே ட்ரீட்.. 'மீசைய முறுக்கு 2' டீசர் அப்டேட் இதோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் நடிகர் மற்றும் இயக்குநராக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவரது முதல் இயக்குநர் முயற்சியான மீசைய முறுக்கு திரைப்படம் வெளியான போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்த வெற்றி படத்தின் தொடர்ச்சியாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகி வரும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முக்கிய அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு (பிப்ரவரி 20), ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் #MeesayaMurukku2 என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகின்றது.

ரசிகர்கள் பலரும், “இதுதான் சரியான பிறந்தநாள் பரிசு” என உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். ஆதியின் முதல் படமான ‘மீசைய முறுக்கு’ இளைஞர்களின் கனவுகள், நட்பு, காதல் மற்றும் இசைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது. அதனால், அதன் இரண்டாம் பாகம் குறித்து நீண்ட நாட்களாகவே எதிர்பார்ப்பு நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement