சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணிக்கு சிற்றி போன் எடுத்து எப்புடி இருக்கீங்க என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி நான் நல்லா இருக்கேன், ஏன் நீங்க போன் எடுத்தனீங்க என்று கேக்கிறார். அதுக்கு சிற்றி நான் ஜெயிலில இருந்து வந்திட்டேன் என்ன ஜெயிலுக்கு அனுப்பின முத்துவ சும்மா விட மாட்டேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி அதுக்கு எதற்கு எனக்கு போன் எடுத்தனீங்க என்று கேக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சிற்றி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று ரோகிணியிட்ட கேக்கிறார். அதுக்கு ரோகிணி என்ன ஹெல்ப் வேணும் என்கிறார். அதைக் கேட்ட சிற்றி எனக்கு ஒரு 15 நிமிஷத்திற்கு முத்துவோட கார் சாவி வேணும் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து ரோகிணி நான் யோசிச்சு சொல்லுறேன் என்கிறார். பின் வித்தியா முருகனோட பைக்கில வீடு வாங்கிறதற்காகப் போகிறார்கள்.
இதனை அடுத்து முருகன் முத்துவுக்கு போன் எடுத்து அவரையும் புது வீடு பாக்க வரச் சொல்லுறார். பின் முத்து முருகனின்ர வீட்டுக்குப் போய் ஏன்டா நீங்களே காசக் கொடுத்து வாங்கியிருக்கலாம் தானே என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து ஓனர் வந்து நிற்கிறதப் பாத்த முத்து இவர எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்று சொல்லுறார்.
அதுக்கு மீனா இவர் தான் உங்க அண்ணாவோட பணத்த ஏமாத்தி வாங்கினவர் என்கிறார். அதைக் கேட்ட முத்து அந்த ஓனரை அடிக்கிறார். பின் முருகனுக்கு மனோஜின்ர பணத்த இவர் தான் ஏமாத்தினார் என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து மனோஜுக்கு போன் எடுத்து உடனே முருகனின்ர புது வீட்டுக்கு வரச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!