• Jun 14 2026

ஒரே இரவில் நிகழ்ந்த அதிசயம்.. முத்துவால் எப்படி முடிந்தது? கிண்டலடித்த நண்பர்களுக்கு ஷாக்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையாக அந்த பழுதடைந்த கார்கள் காணப்படுகின்றன. அவற்றை வைத்து எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று அவர் யோசிக்கிறார்.

அந்த நேரத்தில் அவரது நண்பர்கள் வந்து, "இந்த காரையா சரி பண்ணப் போகிறாய்?" என்று கேலி செய்து சிரிக்கின்றனர். ஆனாலும், "எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று முத்து தைரியமாக களமிறங்குகிறார்.

அதன்படி, இரவு பகல் பாராமல் அந்த கார்களை முழுவதுமாக சரி செய்து விடுகிறார். காலையில் வந்து பார்த்த மீனாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா கார்களும் புதிய கார்கள் போலவே ஜொலிக்கின்றன.


அதன் பின்னர் அங்கு வந்த முத்துவின் நண்பர்களும் அந்த கார்களை ஓட்டிப் பார்த்துவிட்டு, அனைத்தும் நல்ல கண்டிஷனில் இருப்பதாக புகழ்ந்து கொட்டுகின்றனர்.

மேலும், முத்துவும் மீனாவும் ரெடி பண்ணிய காருக்குள் இருந்து உணவு உண்டு, "இதன் மூலம் நாங்கள் எப்படியும் கடனை அடைத்து முன்னுக்கு வரலாம்" என சந்தோஷப்படுகின்றனர்.

அத்துடன், "நாளை முதல் இந்த ஐந்து கார்களும் சிட்டிக்குள் ஓடப் போகின்றன" என்று மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement