• Jul 15 2025

புதிய படத்திற்கு கமிட்டான சூப்பர் ஸ்டார்..! படக்குழு வெளியிட்ட மாஸான அப்டேட்.!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் அரசராக பல்லாண்டுகளாக மக்களின் மனங்களில் வாழும் ஒரு நாயகன் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது காத்திருக்கின்ற இரண்டு மெகா திரைப்படங்கள் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’. 


இவற்றுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் தனது 169வது திரைப்படத்திற்காக புதிய இயக்குநர் நிதிலனுடன் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது, ரஜினிகாந்த் – நிதிலன் கூட்டணி உறுதியானது என்ற தகவல் திரையுலக வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் தயாரிக்கப்போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நிதிலனின் படங்கள் பொதுவாகவே சஸ்பென்ஸ், உண்மையான மனித உணர்வுகள், தீவிர சமூக பின்னணி ஆகியவற்றுடன் கூடியவை. அந்தவகையில் இப்புதிய படம் ரசிகர்களை கவருகின்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement