வெற்றி மாறன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் திரைப்படம் தான் அரசன். மேலும் தேசிங்கு பெரியசாமி, அஸ்வின் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். விரைவில் அந்த படங்களுக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் கவனம் செலுத்தாமல் ஆன்மீகத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனால் அவர் சாமியாராக போகிறார், அவருடைய சினிமா கேரியர் அவ்வளவுதான் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
ஆனால் உடல் எடையை குறைத்து கிட்டத்தட்ட 20 வயது இளைஞர் போல சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பின்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற மெகா பிளாக் பாஸ்டர் படங்களை கொடுத்தார். சமீபத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து தக்லைஃப் படத்திலும் நடித்திருந்தார்.

இவ்வாறான சூழலில் தற்போது அரசன் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஷூட்டிங் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், அரசன் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் பலரும் சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது, பிக் பாஸ் சீசன் 9ல் பங்கு பற்றி எலிமினேட் ஆன திவாகரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!