• Jul 18 2025

"ஜமா" படத்தின் திரை வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

"கூழாங்கல்" திரைப்பட தயாரிப்பு நிறுவனதின் அடுத்த தயாரிப்பான "ஜமா" திரைப்படமானது இயக்குனர் பாரி இளவழகனின்  இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் ஓர் பெரும் சமூக கருத்தினை கொண்ட படமாகும்.இப் படத்தின் இசை இளையராஜா எனும் அறிவிப்புகள் வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாய் உள்ளது.

Jama - Official Trailer | First Look ...

நடிகர்களாக சேந்தன்,அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை என நீளும் வரிசை படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.அண்மையில் வெளியான படத்தின் டீசர் படம் குறித்தான புரிதலை பார்வையாளர்களுக்கு வழங்கி படத்திற்கான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.


வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக்கிருக்கிறது.அதாவது தமிழ் நாடு பூராகவும்  "ஜமா" படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான "பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி" நிறுவனம் வாங்கியுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement