• Jun 05 2025

வித்தியாசமான காதல்; புதிய ஹீரோ! அது தான் ‘ஓஹோ எந்தன் பேபி’ படக்குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தயாரிப்பாளராகப் பல வெற்றிப் படங்களை உருவாக்கி வருகின்றார். இந்நிலையில், அவரது தம்பி ருத்ரா, தனது நடிப்பு பயணத்தை “ஓஹோ எந்தன் பேபி” என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கின்றார். ஒரு இளம் ஹீரோவிற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட கதாப்பாத்திரமே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இவர் காதல் காட்சிகளை உருவாக்குவதில் தனித்தன்மை கொண்டவர். இக்கதையில் காதல் மட்டுமல்லாமல், வாழ்கையின் சந்தோஷமான தருணங்களும் அழுத்தமாகக் கூறப்படுகின்றது. நவீன வாழ்வியல் முறைகள், இன்றைய சமூகத்தின் காதல் பார்வை ஆகியவை திரைக்கதையின் வழியாக விவாதிக்கப்படுகின்றன.


இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவர் பல குறும்படங்கள் மற்றும் புதிய தலைமுறையினருக்கான ஆல்பங்கள் மூலம் பிரபலமடைந்தவர். “ஓஹோ எந்தன் பேபி”யில் காதல், சோகம், ரொமாண்டிக் நுணுக்கங்கள் எனப் பல்வேறு இசைத்தொனிகளில் பரிசளித்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில் ருத்ராவுடன் ஜோடியாக மிதிலா நடித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி இளைய ரசிகர்களை கவரும் வகையில் சினிமாவில் காட்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இத்திரைப்படம் வருகின்ற  ஜூலை 11ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement