1983ஆம் ஆண்டு வெளியான “பிரம்மச்சாரிகள்” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக கே. ராஜன் சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இயக்குனராகவும் , மேலும் சில படங்களில் எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் 85 வயதான தயாரிப்பாளர் கே. ராஜன் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே. ராஜனின் உறவினர்கள் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, தயாரிப்பாளர் கே. ராஜனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

சொல்லப்போனோம்னா ரொம்ப கஷ்டமா இருக்கு. நேத்துல இருந்து நியூஸ்ல எல்லாம் ‘குடும்பத்தால்தான் இந்த பிரச்சனை ஆயிடுச்சு’ன்னு சொல்லிட்டு இருக்காங்க. அது முழுக்க முழுக்க கிடையவே கிடையாது.
அவர் 2019 கொரோனா டைம்ல இருந்தே பாம் குரோ ஹோட்டல்ல தனியா தங்க ஆரம்பிச்சார். அவருக்கு சவுண்ட் பிடிக்காது. பைக் சவுண்ட், சத்தம் எதுவுமே பிடிக்காது. அதனாலதான் அந்த இடத்துல இருந்தார்.
அவர்கூட இந்த டிரைவர்தான் எப்பவுமே இருப்பார். ஏழு வருஷமா நல்லபடியா பாத்துக்கிட்டு இருந்தார். அதே மாதிரி அவரோட பசங்க எல்லாரும் தினமும் அவர்கூட தங்குவாங்க. அவர் தனியா தூங்க மாட்டார். யாராவது ஒருத்தர் கண்டிப்பா அவர்கூட இருப்பாங்க.
வெளியிலிருந்து ஃபுட் வாங்கி சாப்பிடவே மாட்டார். வீட்ல இருந்து எங்க அண்ணி எல்லாரும் சேர்ந்து சமைச்சு தினமும் சாப்பாடு அனுப்புவாங்க. அந்த மாதிரிதான் நாங்க அவரை பாத்துக்கிட்டோம்.
அவருக்கு இரண்டு வருஷமா ஹார்ட் பிரச்சனை இருந்தது. பைபாஸ் சர்ஜரியும் பண்ணியிருந்தாங்க. இப்போ நாலு நாள் முன்னாடிதான் பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க. அதுக்கே 12 லட்சம் ரூபாய் செலவாயிருக்கு. அதையும் குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து தான் செய்தோம்.
அவர் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கினதே கிடையாது. ஆனால் அவர் பல பேருக்கு படம் எடுக்க பணம் கொடுத்திருந்தார். இன்னைக்கும் 20 கோடிக்கு மேல அவரோட பணம் பல பேர்கிட்ட சிக்கி இருக்கு. அதை வாங்கிக்கொடுங்கன்னு அவரே பல பேட்டியில சொல்லியிருக்கார்.
‘படம் எடுத்தோம், படம் ஓடல’ன்னு சொல்லிட்டு பலர் பணம் தராம இழுத்துட்டு இருந்தாங்க. அதனால இது கடன் பிரச்சனையாலோ, குடும்ப பிரச்சனையாலோ நடந்தது கிடையாது. நேத்து சிலர் தெரியாம குடும்ப பிரச்சனைன்னு போட்டது ரொம்ப வேதனையா இருக்க.. என்று உருக்கமாக தெரிவித்தார்.
Listen News!