• May 18 2025

ஹீரோயினை விரட்டி சீரியலுக்கு மூடுவிழா நடத்திய ஜீ தமிழ் டிவி! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்து பிரபலமாக காணப்படுவது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த ஆண்டு பிரியங்கா நல்காரி மற்றும் நந்தா நடிப்பில் ஒளிபரப்பான சீரியல் தான் நள தமயந்தி. இந்த சீரியலில் பணத்தை எதிர்பார்க்காமல் பலரது பசியை போக்குவதை வரமாக நினைக்கும் ஒரு நாயகியும், எல்லாவற்றையும் பிசினஸ் ஆக நினைக்கும் கதாநாயகனையும் வைத்து இந்த சீரியல் நகர்ந்து வந்தது.

எதிர் எதிர் கோணங்களில் இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் எப்படி திருமணம் செய்தார்கள்? அடுத்தடுத்த நடக்கும் சம்பவங்கள் என்பவற்றை இந்த சீரியல் கதைக்களமாக கொண்டிருந்தது. அண்மையில் இந்த சீரியலில் பிரியங்கா நல்காரியின் கதாபாத்திரம் இறந்ததாக காட்டப்பட்டது. இதனால் இந்த சீரியல் இருந்து பிரியங்கா விலகி விட்டதாக தகவல் வெளியானது.


இதை தொடர்ந்து நான் இந்த சீரியலில் இருந்து விலகவில்லை. அடுத்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரியங்கா.


இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் நாயகி ஸ்ரீநிதி அறிமுகமானர். இதனால் இந்த சீரியல் இனி  அவரை வைத்து தான் நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராமல் இந்த சீரியலுக்கு மூடு விழா நடத்தி உள்ளது சீரியல் பட குழு. அதாவது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதன் மூலம் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement