தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பர் விஷால். தற்போது மகுடம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷால் மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளதாக சிறப்பு போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில் மகுடம் படத்தை இயக்கிய ரவி அரசு கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதனால் இந்த படத்தை யார் இயக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், மகுடம் படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு மகுடம் படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

மகுடம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கின்றார். மேலும் அஞ்சலி முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார். மகுடம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Listen News!