• Oct 26 2025

கதிரின் வார்த்தையால் கோபப்பட்ட சக்திவேல்.! முத்துவேலை அசிங்கப்படுத்திய குமார்..

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 சீரியலின் இன்றைய promo-வில் கோமதி நாங்க அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கோம் சாப்பிட்டுத் தான் போகணும் என்று மீனாவோட அப்பாவுக்குச் சொல்லுறார். மறுபக்கம் குமார் ஓடர் பண்ண ஆட்கள் புளிசாதம் கொண்டு வந்திருப்பதைப் பார்த்த சக்திவேல் இதை யாரு கொண்டுவந்தாங்க.... நாங்க சொன்ன கறி சாப்பாடு எங்க என்று கேட்கிறார்.


பின் விருந்துக்கு வந்த எல்லாரும் எங்களை அசிங்கப்படுத்துறீங்களா என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்கள். அந்த நேரம் கதிர் அங்க வந்து யாருமே இங்கிருந்து போக வேணாம் எங்கட அப்பா ஓடர் பண்ண சாப்பாடு இருக்கு சாப்பிட்டுப் போங்க என்கிறார். அதைக் கேட்டு சக்திவேல் கோபப்படுறார். 


பின் எல்லாரும் சந்தோசமாக பாண்டியன் வீட்டு சாப்பாட்டை சாப்பிடுறார்கள். அதைப் பார்த்த முத்து வேல் என்னை ஊரு முன்னாடி அசிங்கப்படுத்திட்ட என்று சொல்லி குமாரை அடிக்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement