தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக மதராஸி திரைப்படம் வெளியானது. தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகின்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இவருடைய கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு பின்பு ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்தார். இந்தப் படமும் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தது.
இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா, அப்பாஸ், ராணா, பாசில் ஜோசப் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு பராசக்தி படக் படக்குழுவினர் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராளியான தமிழ் மொழி ஆர்வலர் தாளமுத்து நடேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பராசக்தி படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தின் கதைக்களமும் 70 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்றது போல எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!