• May 18 2025

அனிருத் தான் வேண்டும்.. அடம் பிடித்த ஷாருக்கான் மகள்.. பாலிவுட்டில் செட்டிலா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் மகள் சுஹானா கான் பாலிவுட் திரை உலகில் அறிமுகமாக போவதாகவும் அவர் நடிக்கும் முதல் படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருப்பதாகவும் இந்த படத்திற்கு ’கிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் தான் வேண்டும் என ஷாருக்கான் மகள் பரிந்துரை செய்ததாகவும் அதை ஷாருக்கான் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. மேலும் அந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றும் அதனால் தான் வழக்கமான பாலிவுட் இசையமைப்பாளர்களை விட அனிருத் இசையமைத்தால் தனது மகளின் முதல் படம் வெற்றிகரமாக இருக்கும் என்று ஷாருக்கான் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’ஜவான்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஷாருக்கான் நடிக்கும் படத்திற்கு அனிருத்  இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் இந்த படத்தில் கொடூரமான டான் கேரக்டரில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் ஆகிய இருவரது சம்பளம் சேர்க்காமல் 200 கோடி ரூபாய் படத்தின் மேக்கிங்ற்காக மட்டுமே செலவு செய்ய ஷாருக்கான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சுஜாய் ஜோஷ் என்பவர் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு திரை உலகில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்தடுத்து பாலிவுட் படங்களையும் ஒப்புக்கொண்டு வருவதால் அவர் பாலிவுட்டில் செட்டில் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement