தமிழ் சினிமா, யூடியூப் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் எப்போதும் பேசப்படும் பிரபலமான சினிமா பர்சனாலிட்டி வனிதா விஜயகுமார், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகை சகிலா நடித்திருந்த திரைப்படங்களை, எவ்வாறு ரகசியமாக பார்த்துள்ளார் என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதன்போது, “எங்கள் வீட்டில் எல்லா விஷயத்திலும் பாதுகாப்பு அதிகம். சின்ன வயசில நைட் டீவில சகிலா படம் போடுவாங்க. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, பெரியவர்கள் எல்லாம் ரொம்ப strict. ஆனாலும் அவர்களெல்லாம் தூங்கினதுக்கப்புறம், டீவியை மெதுவாக ஆன் பண்ணி, வால்யூம் இல்லாமல் mute பண்ணி பார்த்திருக்கேன். அது எல்லாம் சின்ன வயசு memories.” என்று கூறியுள்ளார்.
வனிதாவின் பேட்டி வெளியான பிறகு, பலரும் சமூக ஊடகங்களில் இது தொடர்பாக கருத்து பதிவு செய்து வருகின்றனர். சிலர்,“நான் கூட அப்படி தான் பார்த்திருக்கேன், openஆ சொல்லுறதுக்கு guts வேணும்!” எனக் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.
Listen News!