இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியாமனி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , தீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், அதற்காக அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று கோடி ரூபாய் கொடுத்து கதையின் காப்புரிமையை பெற்றதாகவும் கூறப்பட்டது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனநாயகன் படத்துடன் இன்னும் இரண்டு படங்கள் களம் இறங்க உள்ளன. அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும், ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படமும் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பூஜா ஹெக்டேயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் ஜனநாயகன் படத்தில் கயல் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது .
Team #JanaNayagan wishes Kayal aka @hegdepooja, A very happy birthday ♥#HappyBirthdayPoojaHegde#Thalapathy @actorvijay sir #HVinoth @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/gCNXuOPXc4
Listen News!