• Oct 26 2025

LOKAH படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மற்றுமொரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது LOKAH திரைப்படம். கடந்த ஆகஸ்ட் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், உலகளவில் தற்போது ரூ.300 கோடியை தாண்டி மாபெரும் வசூலை அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த வெற்றியின் பின்னணி, அதன் தனித்துவமான கதைக்களம், தரமான தயாரிப்பு, கல்யாணி பிரியதர்சனின் சக்திவாய்ந்த நடிப்பு ஆகியவை முக்கிய காரணிகள் என பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் ஒருமனதாக கூறுகின்றனர்.

LOKAH திரைப்படம் ஒரு மர்மம், அரசியல், ஆன்மீகம் மற்றும் மனித உணர்வுகளை ஒட்டியுள்ள சிறப்பான சினிமா முயற்சியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் வெளியாகிய தினத்திலிருந்தே விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்லபடியாக கவனம் ஈர்த்தது.


திரைப்படத்தை இயக்கியவர், டோமினிக் அருண். இவர் இதற்கு முன்னர் சில குறும்படங்கள் மற்றும் இணைய தொடர்களில் பணியாற்றியவர். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்சன், இந்த திரைப்படத்தின் தலைமைத் தூணாக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement