• Apr 27 2025

ரூ.35 லட்சம் மதிப்புள்ள பைக் பரிசளித்த அஜித்.. பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் பைக்கிலேயே அவர் உலகம் முழுவதும் சுற்றுலா திட்டமிட்டு உள்ளார் என்பதும் இந்தியா முழுவதும் சுற்றிவிட்ட அவர் ஏற்கனவே உலகின் சில நாடுகளில் சுற்றி முடித்து விட்டார் என்பதும் தெரிந்தது. ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு மீண்டும் அவர் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அஜித்தின் பைக் ஆர்வம் அவரது சக நடிகர் நடிகைகளையும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகை இல்லை. ஏற்கனவே அஜித்தை பார்த்துதான் தானும் பைக் ஓட்ட கற்றுக் கொண்டதாகவும் புதிய பைக் வாங்கியுள்ளதாகவும் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் பேட்டி அளித்திருந்தார். ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அஜித்தை பார்த்து அவர் பைக் ஓட்ட பழகிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் தற்போது அஜித் தன்னுடன் விடாமுயற்சி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு 35 லட்ச ரூபாய் பைக்கை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசு ஆரவ்வுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் அஜித்துக்கு நன்றி கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய பட குழுவின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement