• Oct 26 2025

ஓடிடிக்கு வந்திறங்கிய இட்லி கடை.. எங்கே.? எப்போது.? பார்க்கலாம் தெரியுமா.?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் திகழ்பவர்  தனுஷ். இவருடைய  நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் இட்லி கடை.  இது தனுஷ் நடிக்கும் 52 வது படமாகும். இந்த படத்தில் நித்யாமேனன் கதாநாயகியாகவும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளதோடு, இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 

இட்லி கடை திரைப்படம் வெளியாகி  மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.  மேலும் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் குவிந்து வருவதாகவும் கூறப்பட்டது. 


ஆரம்பத்தில் இந்த படம் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை  மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  ஆனாலும் அத்தனையும்  படம் ரிலீஸ் ஆன பிறகு  பாசிட்டிவாக மாறியது. 

இந்த நிலையில், இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி  வெளியாகி  உள்ளது.  அதன்படி  இட்லி கடை படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் எதிர்வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 




Advertisement

Advertisement