• Sep 08 2025

மொட்டை தலையுடன் பழனியில் முருகதாஸ்....!மதராஸி வெற்றிக்காக ஆன்மீக வழிபாடு...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. துப்பாக்கி, ரமணா, கத்தி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய முருகதாஸ், இம்முறை நடிகர் சிவகார்த்திகேயனை முதன்முறையாக இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலர்களிடமிருந்து இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவருகிறது.


திரைப்பட வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், இயக்குனர் முருகதாஸ் இன்று காலை பழனியில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தார். அதிகாலை அடிவாரத்துக்கே வந்த அவர், முதலில் மொட்டையடித்து, பின்னர் மலைக்கோவிலுக்குச் சென்று முருக பெருமானை மனமுருகி வழிபட்டார்.


வழிபாட்டை முடித்த பிறகு, அவர் திருஆவினன்குடி கோவிலிலும் தரிசனம் செய்தார். மொட்டைத் தலை மற்றும் எளிமையான உடையில் இருந்த முருகதாஸை பலரும் அடையாளம் காணவில்லை. ஆனால், சிலர் அவரை அடையாளம் கண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement