• Aug 11 2025

எனக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி.! டிராகன் 100நாள் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட பிரதீப்..!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளம்கலைஞர்களில் ஒருவராக திகழும் பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது படமான "டிராகன்" மூலம் 100 நாள் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், ரசிகர்களிடம் தனது நெஞ்சளவான நன்றியை பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


“லவ் டுடே” படம் மூலம் வெற்றிக்கொடி காட்டிய பிரதீப், அதன் பிறகு “டிராகன்” படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரு வித்தியாசமான காதல் கலந்த பயணமாக அமைந்திருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்லாமல், மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து, படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனையை பதிவு செய்துள்ளது.


100-வது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரதீப், ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ச்சியில் கண்ணீர் வடியும் அளவிற்கு உருக்கமான உரையைக் கூறினார்.அதன்போது,“மிக குறுகிய காலத்தில் என்னை இந்த மாதிரி இடத்தில் நிற்க வைத்திருக்கீங்க... இது ரொம்ப பெரிய இடம்... இதுக்கு நானென்றும் நன்றிக்கடனாக இருப்பேன்” என்று தொடங்கிய அவர், அங்கிருந்த அனைவரது மனதையும் தொட்டுவிட்டார்.

மேலும், “இது எனக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி. இது உங்களால தான் சாத்தியமாயிடுச்சு. இதை உங்களுக்கு தான் சமர்ப்பிக்கிறேன்” என்றும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement