• Aug 16 2025

கடவுளே.. ரஜினியே..!‘கூலி’க்கு 50 அடி பேனர்....! கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது. சென்னையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் ஒன்று, வெளியீட்டிற்கு முன்னதாகவே 50 அடி நீள பேனர் வைத்து,  கேக் வெட்டி கொண்டாட்டி  ஏற்பாடு செய்ததுள்ளனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரசிகர்கள், “கடவுளே.. ரஜினியே..! இது நம்முடைய திருவிழா. எங்களை மீண்டும் திரையரங்கிற்கு அழைத்து வரக்கூடிய ஒரே நாயகன் ரஜினி தான்,” என்று உணர்ச்சிவசப்பட தெரிவித்தனர். ‘ஜெயிலார் ’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்திற்காக நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், இசை, போஸ்டர், பிலிம் அப்டேட்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட பிரபலங்களும் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் இவ்வளவு மிகைப்படியான வரவேற்பு, ரஜினியின் பிரபலத்தை மறுபடியும் நிரூபிக்கிறது. ஆகஸ்ட் 14 நெருங்கும் நேரத்தில், மேலும் பல ரசிகர் விழாக்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

Advertisement

Advertisement