சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தன்னால் தான் மனோஜ்க்கு 40 லட்சம் ரூபாய்க்கு லாபம் கிடைத்தது. நான் தான் அவருக்கு இந்த ஆர்டரை எடுத்துக் கொடுத்தேன்.
என்னுடைய கஸ்டமர் ஒருவர் தான் இந்த ஆர்டரை என்னை நேரில் கூப்பிட்டு கொடுத்தார் என்று சொல்ல , ரோகிணி என்ன இப்படி பொய் சொல்லுகின்றார், நான் உண்மையை சொல்லப் போகின்றேன் என்று ஸ்ருதி எழுகின்றார். ஆனால் மீனா அவரை அடக்கி வைக்கின்றார்.
இதை கேட்ட விஜயா, உடனே என்னுடைய மருமகள் ஆயிற்றே என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றார்கள் . மேலும் இதனால் ரோகிணியை புகழுகின்றார்.
அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் கோடீஸ்வரி தான் மீனாவுக்கு தினமும் பூ கொடுப்பதற்கு ஆர்டர் வந்துள்ளது. அதுவும் 275 வீடுகளுக்கு கணக்கு பார்த்தால் மீனாவும் கோடீஸ்வரி தான் என்று சொல்ல, விஜயா மேலும் அதிர்ச்சி அடைகின்றார்.

அதன்பின்பு மீனாவும் ஸ்ருதியும் காபி குடித்துக்கொண்டிருக்க, அங்கு ரோகிணி வருகின்றார். இதன் போது ஸ்ருதி, உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் பொய் சொல்ல முடிகின்றது என்று கேட்க, மீனா சொன்னதால் மட்டும் எனக்கு அந்த ஆர்டர் கிடைக்கவில்லை. எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். நான் அவருக்கு அடிக்கடி மேக்கப் செய்யப் போய் உள்ளேன். என்னை பார்த்ததும் தான் அவர் எனக்கு இந்த ஆர்டரை கொடுத்தார்.
இவ்வாறு ரோகினி சொல்லவும், ஆனாலும் மீனா சொல்லாமல் உங்களுக்கு இந்த ஆர்டர் கிடைத்து இருக்காது என்று ஸ்ருதி சொல்லுகின்றார். ஆனால் இதனை ரோகிணி ஏற்றுக் கொள்ளவே இல்லை. இறுதியில் மீனாவுக்கு நன்றியும் சொல்லவில்லை. இதனால் ஸ்ருதி கோபப்படுகிறார்.
இன்னொரு பக்கம் முத்துவும், அதே அப்பார்ட்மெண்ட்ல உனக்கும் பூ ஆர்டர் கிடைச்சு இருக்கு, ரோகிணிக்கும் அதே அப்பார்ட்மெண்ட்ல ஆர்டர் கிடைச்சிருக்கு ஏதோ டவுட்டா இருக்கு என்று சொல்ல, மீனா நடந்த உண்மை எல்லாம் சொல்லுகின்றார்.
இதைக் கேட்ட முத்து அப்படி என்றால் நீ இதனை எல்லாம் முன்னிலையிலும் சொல்லி இருக்க வேண்டும். மனோஜ் போல ரோகிணிக்கும் கொஞ்சம் கூட நன்றி உணர்வு கிடையாது என்று சொல்லி பேசுகின்றார். மேலும் இதை வைத்து அவர் ஓவராக பண்ணட்டும் அப்போ தெரியும் என்று கூறுகின்றார்.
இறுதியில் பார்வதி தனது நண்பருடன் சேர்ந்து கதை பேசி வீடியோ ரெக்கார்ட் பண்ணி கொண்டிருக்க, அங்கு விஜயா வருகின்றார். இது தான் இன்றைய எபிசோட்
Listen News!