பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்திலோட புது வீட்டுக்கு மீனாவோட அம்மா, அப்பா வந்துநிக்கிறதை பார்த்த உடனே மீனா சந்தோசப்படுறார். அங்க வந்த மீனாவோட அப்பா நாங்க இந்த வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கித்தாறோம் என்கிறார். அதைக் கேட்ட மீனா அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்கிறார். பின் மீனாவோட அம்மா நீங்க முறைப்படி கல்யாணம் செய்திருந்தால் இதெல்லாம் தந்திருப்போம் அப்புடி செய்யாத படியா இப்ப தன்னும் வாங்கித் தாறோம் என்கிறார்.

அதனை அடுத்து மீனாவோட அப்பா செந்திலைப் பார்த்து உங்க வீட்டு ஆட்கள் எதையாவது சொல்லி உங்கள இங்கிருந்து கூட்டிட்டு போய்டுவாங்களோ என்று தான் பயமா இருக்கு என்கிறார். அதுக்கு செந்தில் அப்புடியெல்லாம் அவங்க பண்ணிடமாட்டாங்க என்கிறார். அதனை அடுத்து, பழனி சக்திவேல் வீட்ட போய் நிற்கிறதை பார்த்த உடனே பாட்டி கதிர் செய்து தந்த போட்டோவை மாட்டி விடு என்று கேட்க்கிறார்.
அதுக்கு பழனி உன்ர மகன்கள் பேசுவினம் என்கிறார். பின் சுகன்யா முத்துவேல் கிட்ட பாண்டியன் பழனியை கடையில வைச்சு அசிங்கப்படுத்துறார் என்ற விஷயத்தை சொல்லுறார். மேலும் பழனிக்கு திருட்டு பட்டம் கட்டினவர் என்று கோபமாக சொல்லுறார் சுகன்யா.அதைக் கேட்ட முத்துவேலும் சக்திவேலும் பேசுறார்கள். அதனை அடுத்து பாட்டி பழனிக்கு கடை வைச்சுக் கொடுக்கச் சொல்லுறார்.

பின் குமார் அரசி கிட்ட போய் உன்கிட்ட பேசணும் என்கிறார். அதுக்கு அரசி உன்கூட பேச விருப்பம் இல்ல என்கிறார். பின் குமார் தான் திருந்திட்டன் என்கிறார். அதனை அடுத்து மீனா பாண்டியன் வீட்ட போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!