தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். காதல், குடும்பம், காமெடி ஆகிய வெவ்வேறு ரோல்களின் மூலம் தேர்ச்சி பெற்ற இவர், தற்போது முழுமையான ஆக்சன் ஹீரோவாக மாற்றமடைந்துள்ளார். அந்த மாற்றத்தின் தொடக்கமாக உருவாகியிருக்கும் திரைப்படமே “டீசல்”.

இந்த திரைப்படம் அக்டோபர் 17ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கிடையில் நடிகர் ஹரிஸ் கல்யாண் செய்தியாளர்களிடம், “இது ஒரு முழுமையான ஆக்சன் படம். இதுவரை நான் செய்திராத ஒரு விதமான ஹீரோயிசம் இதில் இருக்கிறது. எனக்கே இந்த ஆக்சன் ஓவரா இருக்கோ என்ற சந்தேகம் இருந்துச்சு. ஆனா… டிரெய்லரை பார்த்து, சிம்பு (STR) பாராட்டினார். அது எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்தது.” என்றார்.

இந்த கருத்துகள் அவரது மனநிலையைப் பிரதிபலிக்கிறது. திரையில் தனது புதிய பரிமாணத்தை காட்ட வேண்டும் என்ற முயற்சியில், அவருக்கு ஏற்பட்ட பதட்டம், ஒரு முன்னணி நட்சத்திரமான சிம்புவால் அழகாக நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!