• Oct 26 2025

Bison ட்ரெய்லரை பாராட்டிய சந்தோஷ் நாராயணன்.! என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்களேன்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தலைசிறந்த நடிகர் விக்ரம் அவர்களின் மகனாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த துருவ் விக்ரம், தனக்கென ஒரு சிறப்பான பாதையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது, அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘Bison’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த டிரெய்லரை பாராட்டி பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது 'X' தளப்பக்கத்தில் ஒரு பதிவினைப் பகிர்ந்துள்ளார்.


‘Bison’ திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' போன்ற சமூக உணர்வுப் புனைந்த படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அவரது இயக்கத்தில் உருவாகும் இப்படமும், சாதாரண மாஸ் கமர்ஷியல் படமல்ல. மாறாக, இது விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு சமூக அரசியல் கருத்துள்ள படம் என முன்னரே கூறப்பட்டிருந்தது.


‘Bison’ படத்தில் துருவ் விக்ரம், கலந்து கொள்வதற்காக, தனது வாழ்க்கையின் பல போராட்டங்களை கடந்து செல்லும் ஒரு இளைஞனாக நடித்துள்ளார். அவருடைய தோற்றம் மற்றும் மேக்கோவரோடு கூடிய புதிய அவதாரம், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி பூர்வமான நடிப்பு, நம்பிக்கைகள், எதிர்ப்பு மற்றும் சமூக போராட்டம் என அனைத்தையும் ஒரே கட்டத்தில் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிரெய்லரை பார்த்து, பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், தனது X தளப்பக்கத்தில், பாராட்டுகளையும், பெருமிதத்தையும் அடங்கிய பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில்,"Great Visuals.. production values.. music and performance in this trailer. Bison could potentially be a bench mark sports fil. jeichidu kabilaaa..." என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement