• Jul 12 2025

" சூர்யா சேதுபதி தளபதி மாதிரி மாறுவார்.." - உறுதியாக கூறிய நடிகை வனிதா

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி 'பீனிக்ஸ்' என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவரது அறிமுகம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய சில Troll-களும் வேகமாக பரவி வருகின்றன.


இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இது பற்றிய தனது ஆதரவை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.  " இன்றைக்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி Troll செய்யப்படுவது, தளபதி மாதிரி ஸ்டாராக மாறுவதற்கான அறிகுறிதான் 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' பட நேரத்துல விஜயோட முகத்தை அப்படி கிண்டல் பண்ணியிருக்காங்க. நானே நேர்ல பார்த்துருக்கேன். ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இன்றைக்கு ஜெயிச்சுருக்காரு சூர்யா சேதுபதிக்கு நான் சொல்றது என்னென்னா, போராடி அவங்க அப்பாவைவிட பெரிய ஹீரோவாக வரணும்"


மேலும் தனது மகளை சூர்யா சேதுபதியுடன் சேர்த்து கதைப்பவர்களுக்கு "அவர்கள் வளர்ந்து வரும் கலைஞர்கள் இவ்வாறு வதந்திகளை பரப்பி அவர்களது வாழ்க்கையை வீணடிக்காதீர்கள் " என ms and mr திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement