• Apr 18 2024

ஜீரோ டிகிரி வெப்பம்; ‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகிய அதிரடிப் புகைப்படம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பல நடிக்கின்றனர். இப்படத்தினுடைய படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


மேலும் காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இருப்பினும் இக் குளிரையும் பொருட்படுத்தாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், இதனால் தடையின்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில் காஷ்மீரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ஒரு செட்டில் 'லியோ' படப்பிடிப்பு இடம்பெற்று வருவதாகவும் அங்கு ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் இருக்கிறது என்றும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. 


அதாவது இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் இருக்கும் இந்தப் புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement