• Apr 17 2024

புனித பயணம் சென்ற வீடியோவைப் பதிவிட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 1997ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. இருப்பினும் இவருக்கு அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் தான் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

  அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா  இதுவரை 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுபோல செல்வராகவன், வெங்கட்பிரபு, அமீர், ஏ ஆர் முருகதாஸ், ராம், ஹரி என முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.


இந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் யுவன் ஷங்கர் ராஜா, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு உம்ரா புனித பயணம் சென்றார். யுவன், இஹ்ராம் அணிந்து கொண்டு உம்ரா புனித பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகின‌.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மனைவி ஜப்ரூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புனித பயணம் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இஹ்ராம் அணிந்து கொண்டு யுவன் ஷங்கர் ராஜா இந்த வீடியோவில் காணப்படுகிறார். விமானம் & காரில் தனது மகளுடன் பயணம் செய்த காட்சிகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement