• Feb 08 2023

ரசிகர்களின் முகத்தை பச்சை குத்திய யூடியூப் பிரபலம் TTF வாசன்- தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய ஜி.பி முத்து

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

யூடியூப் தளத்தில் தம்முடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன்

இவர் தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின.


 டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார்.

இவரைப் போல டிக்டாக் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் பிரபல்யமானவர் தான் ஜு.பி முத்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும் அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதும் முக்கியமாகும்.


இந்நிலையில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் போது அந்த இடத்திற்கு ஜி.பி. முத்து வருகை தந்துள்ளார். மேலும் வாசனை புகழ்ந்து பேசியுள்ளார். "நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட.. டிடிஎஃப் வாசன் தனது ரசிகர்களுக்காக 40 பேர் முகத்தை பச்சை குத்துறார். உன் ரசிகர்கள் மேலே உள்ள பாசத்தை பாராட்டுறேன் தம்பி" என பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement