• Mar 28 2023

13 வயதிலேயே என்னை வீட்டை விட்டு அனுப்பீட்டாங்க- அம்மாவே இவ்வளவு கொடுமைப்படுத்தினாங்களா?- மனம் நொந்த நடிகை சங்கீதா

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில்  ஒரு கால கட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தான் சங்கீதா. இவர் நடித்த படங்களில் பிதாமகன் திரைப்படம் இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படமாக இருக்கின்றது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

பின்னர் பாடகர் கிரிஸை திருமணம் செய்து நடிப்பிலிருந்து விலகிய இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.


இது தவிர ஷு தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார். இந்த நிலையில் ஒரு தகவலைக் கூறி இருக்கின்றார். அவர் கூறியதாவது சங்கீதாவின் தாய் தன்னை வீட்டை விட்டு தனது பள்ளிப்பருவத்திலேயே துரத்திவிட்டராம். மேலும் இவரது குடும்பத்தில் அனைவருக்கும் இருக்கும் ஆதிக்கம் சங்கீதாவுக்கு இல்லையாம்,ஆனால் தனது இரண்டு அண்ணன்களுக்கு மட்டுமே அனைத்து சொத்துக்களையும் எழுதி வைப்பதாக கூறியுள்ளாராம் சங்கீதாவின் தந்தை.


தற்போது இந்த ட்விட்டர் பக்கத்தில் தனது தாயை பற்றி என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததுக்கு மிகவும் நன்றி என்றும் என்னை பள்ளிக்கூடம் படிக்கும் போது 13 வயதில் வீட்டை விட்டு துரத்தியதற்கும் நன்றி, மேலும் அத்தோடு என்னை சிறுவயதில் வேலைக்கு அனுப்பியதற்கும் நன்றி மேலும் குடும்ப சொத்துக்களில் என்னை கையெழுத்து போடவைத்ததற்கும் மிக்க நன்றி,மேலும் உங்க இரண்டு விளங்காத மகன்களுக்காக எனது வாழ்க்கையை அழித்தற்கு மிகவும் நன்றி உன் பேச்சை கேக்காத நேரத்தில் மற்றவர்கள் முன் அவமானப்படுத்தியவர்களுக்கு நன்றி என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement