Saturday, May 28, 2022

நீ கூட திருடியாக இருக்கலாம்-பணம் திருட்டு போன விடயத்தில் அர்ச்சனாவை சந்தேகப்படும் செந்தில்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது சரவணன் 5 லட்சம் பணம் காணாமல் போனதை நினைத்து பின் பக்கம் அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த சந்தியா பணம் நிச்சயம் கிடைக்கும் வருத்தப்படாதீங்க. நாம கஷ்டப்பட்டு சேர்த்த பணம் நம்ம கைய விட்டு போகாது பணம் வெளியே எங்கேயும் போகல வீட்டுக்குள்ள இருக்கிற யாரோ ஒருவர்தான் எடுத்து வச்சு இருக்காங்க என சந்தியா சொல்ல அதற்கு சரவணன் அது தான் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

வெளியாள் யாராவது எடுத்து இருந்தால் கூட எனக்கு இவ்வளவு கவலை இருந்திருக்காது .பணத்தை பார்வதி கல்யாணம், அர்ச்சனாவின் கடை என அனைவருக்கும் பங்கு போட்டு விட்டு இதில் ஆதிக்கு மட்டும்தான் எதுவும் செய்யவில்லை. அதனால் அவன் எடுத்து இருப்பானோ ஆனாலும் அவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம் தேவைப்படுகிறது என சந்தியா கூறிவிடுகிறார். போலீஸுக்கு போகணும் அப்போதும் யார் பணத்தை திருடி இருக்கங்க என தெரியும் என சரவணன் சொல்ல சந்தியா வேண்டாம் என கூறுகிறார்.

பின்பு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் வந்த மயிலு தயவு செய்து என் மேல சந்தேகப்படாதீர்கள். என்னதான் நான் இந்த வீட்டுல ஒருத்தர் மாதிரி இருந்தாலும் நான் இந்த வீட்டு வேலைக்காரி தான். அதனால பணம் காணாமல் போனதில் அதிகமாக எல்லோருக்கும் சந்தேகம் என் மேலதான் இருக்கும். ஆனா சத்தியமா நான் பணத்தை எடுக்கல. யார் என் மேல சந்தேகப் பட்டாலும் நீங்க ரெண்டு பேரும் என்னை சந்தேகப்பட்டு விடாதீங்க என அழுகிறார். உனக்குள்ளே எதுக்கு இப்படி ஒரு புத்தி வந்தது? நாங்க உன்ன பத்தி கொஞ்சம் கூட நினைக்கல என சந்தியா ஆறுதல் கூறி சாப்பாடு எடுத்து வைக்கலாம் வா என அழைத்து செல்கிறார்.

பினபு சிவகாமி பணம் காணாமல் போனது பற்றி தன்னுடைய கணவரிடம் அது சந்தியாவின் சரவணனும் கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு போராடி ஜெயித்த பணம். அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும். அந்தப் பணத்தைத் திருடியது யாராக இருந்தாலும் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். அது திருடனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அந்த வீட்ல அவர்களுக்கு இடம் கிடையாது என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து அர்ச்சனா 5 லட்சம் பணம் திருடு போனது பற்றி யார் முகத்திலும் எந்த பதற்றமும் இல்லை ஒருவேளை சந்தியாவுக்கு சரவணனுக்கும் தான் இந்த பணம் முழுசாக சேரனும் என அத்தை இப்படி ஒரு டிராமா போடறாங்களோ எனக் கண்ட படி பேசி செந்திலை திட்டிவிட்டு படுத்துத் தூங்குகிறார். மேலும் அர்ச்சனாவிடம் யார் பணத்தை எடுத்தாங்க என்று நாளைக்கு தெரிந்துவிடும். அது திருடியா கூட இருக்கலாம், அந்த திருடி நீயாக கூட இருக்கலாம் என கூறுகிறார்.

அத்தோடு நீ நல்லவளா ஆகுற வரைக்கும் எப்படியும் என் சந்தேகம் லிஸ்ட்ல தான் இருப்ப என்று செந்தில் கூறுகின்றார். பின்பு சந்தியா பணத்தை பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க சரவணன் என்ன வருத்தப்பட வேண்டாம் னு சொல்லிட்டு நீங்க எதுக்கு வருத்தப்படறீங்க எனக் கேட்கிறார். பணத்துக்காக வருத்தப்படாத அந்த பணம் எங்க போச்சுன்னு தான் வருத்தப்படுகிறேன் என சந்தியா கூறுகிறார்.

பேசாம நாம போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என சந்தியா சொல்ல அதெல்லாம் வேண்டாம் . போலீஸ் நான் சொன்னதும் அம்மா முகத்தைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவங்களுக்குள்ள இன்னமும் பயம் இருக்கு அதனால் பொலீஸ் எல்லாம் போக வேண்டாம். பணம் திரும்பவும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதை எடுத்தவங்க பயன்படுத்தப்பட்டும் இதைப் பத்தி யோசிக்காம படுத்து தூங்குங்க என சரவணன் கூறுகிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்