நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி

535

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் ஷிவாங்கி அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கென தனி அங்கீகாரத்தை கொடுத்தது என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இதில் பங்குபெற்றதன் பிற்பாடு பல படங்களில் கெமிட்டாகி பிஸியாக உள்ளார் ஷிவாங்கி.

இந்நிலையில் சினிமா, குக் வித் கோமாளி, அஸ்வினுடனான நட்பு குறித்து ஷிவாங்கி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னதும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்றார்.

மேலும் சமைக்கவே தெரியாத ஒரு ஆளை சமையல் நிகழ்ச்சிக்கு வர சொல்கிறார்களே என எண்ணினேன். ஆனால் முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பின்னர் எனக்கு கான்செப்ட் புரிந்துவிட்டது. அஸ்வின் ஒரு அர்ப்பணிப்பான ஆள். அவரை முதல் முறை பார்த்தபோது அவருக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்று நினைக்கவே இல்லை என்று ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.

அத்தோடு என்னடா இது, இவ்ளோ அழகான ஒரு பையனு சொல்லிட்டு தான் நான் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் அவர் அமைதியாக இருந்தார். அது தான் என் ஆவலை தூண்டியது. நான் நானாக இருக்க செய்தார் அஸ்வின். அவர் ஒருபோது முகம் சுளித்தது இல்லை. அதனால் தான் எங்கள் ஜோடி வெற்றி பெற்றது. அத்தோடு அனைத்தையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார் என்கிறார் ஷிவாங்கி.

மேலும் எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். என் பெற்றோர் பாடுவார்கள் என்பதால் பின்னணி பாடும் உலகம் எனக்கு நன்கு பழக்கம்.

மேலும் சிறு வயதில் இருந்தே ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு செல்கிறேன். ஆனால் தொலைக்காட்சிக்கும், சினிமாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. வித்தியாசம் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என ஷிவாங்கி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் எடுத்துள்ள அதிரடி முடிவு..! OTT-யில் ரிலீஸா?
  3. அறுவைச் சிகிச்சை செய்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: