• Apr 19 2024

நீங்க ஹெட் மாஸ்டர் மாதிரியே இருக்கிறீங்க- ஜனனி விஷயமா ஐய்யோ பேசாதீங்க- திணறும் ஹவுஸ்மேட்ஸ்- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளநிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று பிக் பாஸ் சீசன் நான்கின் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி விருந்தினராக வந்திருந்தார். ஒவ்வொரு போட்டியாளரையும் கிண்டலடிக்கும் வகையில் கிப்டுகளை கொடுத்து அசத்தினார்

இதையடுத்து, இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விஜே பார்வதி  மற்றும் ஷோபனா ஆகியோர் கெஸ்டாக வந்துள்ளனர். ஆரம்பமே அசத்தல் என்பது போல, வணக்கம் மக்களே என்று பிக் வீட்டிற்குள் வந்து அசீமை வம்பு இழுத்ததோடு , ஷோபனா, மைனா நயன் தாரா மாதிரி இருக்கார் என்று மைனா நந்தினியை பங்கமாக கலாய்த்திருந்தார்.

இதனை அடுத்து விஜே பார்வதி, மைனா நந்தினியிடம் நேர்காணல் நடத்துவது போல சரமாரியான கேள்வி கேட்டுள்ளார். அதில், எதுக்காக இங்கே வந்தீங்க, நீங்க பண்ற காமெடிக்கு எல்லாம், இங்கு இருப்பவர்கள் நிஜமாகவே சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீங்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


இதனை அடுத்து மூன்றாவதாக வெளியாகியுள்ள ப்ரோமோவில் அமுதவானணிடம் ஷோபனா நீங்க இப்போ நல்லாத் தான் விளையாடுறீங்க இடையில் எதற்கு உணர்ச்சி வசப்பட்டீங்க என்று கேட்க அவர் ஜனனி விஷயமா, தயவு செய்து அதை பேசாதீங்க என்கிறார். தொடர்ந்து விக்ரமனை விஜே பார்வதி இன்டர்வியூ எடுக்கும் போது அரசியல்ல இருக்கிறதால் ஹெட் மாஸ்டர் மாதிரியே நடந்து கொள்ளுறீங்க என்று ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement

Advertisement