• Apr 01 2023

நீ ஒரு நல்ல பையன் …என் ஏஞ்சல் பாய்!- தனது லிட்டில் ஓரியோவுக்கு வாழ்த்துத் தெரிவித்த நஸ்ரியா - வைரலாகும் போட்டோஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான்  நடிகை நஸ்ரியா நசீம்.தொடர்ந்து தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சினிமாவில் பிஸியாக வந்து கொண்டிருக்கும் போதே  நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்திற்குப் பின்னர் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அந்த வகையில்  சமீபத்தில் நானியுடன் அடடே சுந்தரா படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.


இந்நிலையில் தமது   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு நஸ்ரியா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.


அதில், " என் சிறிய இதயத்துடிப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.... கடந்த எட்டு வருடங்களில் என் இதயம் மகிழ்ச்சியாக இருந்தது.

நீ தூய அன்புடையவன், நீ எங்களைத் தேர்ந்தெடுத்தது எங்கள் அதிர்ஷ்டம்! எங்கள் சூரிய ஒளி நீ. எங்கள் வீட்டை நீ மகிழ்ச்சியான இடமாக மாற்றியுள்ளாய்...நீ ஒரு நல்ல பையன் …என் ஏஞ்சல் பாய்! 🐶


கடைசி மூச்சு என் உடலையோ அல்லது உன்னுடைய உடலையோ விட்டு வெளியேறும் வரை ஒன்றாக இருப்போம்! நான் சத்தியம் செய்கிறேன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் லிட்டில் ஓரியோ!" என நஸ்ரியா பதிவிட்டுள்ளார் இவரின் பதிவு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement