• Sep 13 2024

பிரபல கோயிலில் யோகிபாபு சந்தித்த அவமானம்- கொந்தளிக்கும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். 

இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.இறுதியாக ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான எல்.ஜி.எம் படத்தில் நடித்திருந்தார்.கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கும் யோகி பாபுவுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.


இந்நிலையில் யோகி பாபு கோவிலுக்கு சென்றபோது அவர் தீண்டாமையை சந்தித்தார் என சர்ச்சை எழுந்திருக்கிறது.யோகி பாபு கைகொடுக்க வரும் நிலையில் அதை மறுத்துவிட்டு அந்த நபர் கையை மட்டும் காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் ரசிகர்கள் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement