• Apr 19 2024

வெளியானது யோகிபாபுவின் ‘பூமர் அங்கிள்’ டிரைலர்..இவ்வளவு பேரு நடிச்சிருக்காங்களா

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறியுள்ளார் நடிகர் யோகி பாபு. இவர் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.


அதுமட்டுமல்லாமல் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான மாடெலா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்துவந்த இவர் இப்போது நாயகனாகவே சில படங்கள் நடித்துள்ளார்.


இவரின் கால்ஷீட் கிடைக்க இயக்குனர் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம். 2009ம் ஆண்டு தான் யோகி பாபு முதன்முறையாக சினிமா பயணத்தை தொடங்கினார்.


இந்நிலையில் யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள படம் பூமர் அங்கிள். சுவதீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு உடன் பிக்பாஸ் பிரபல ஓவியா, நகைச்சுவை நடிகர்கள் தங்கதுரை, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என தலைப்பு வைக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் வடிவேலு தனக்கு அந்த தலைப்பு தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டதை அடுத்து பூமர் அங்கிள் என மாற்றிக்கொண்டனர். 


இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement