• Apr 16 2024

இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை படைத்த யோகி பாபு… நல்லா தான் யோகம் அடிக்குது போல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் ரொம்பப் பிஸியான பிரபலம் என்றால் அது நம்ம யோகி பாபு தானுங்க. இவர் 2009-ஆம் ஆண்டு வெளியான 'யோகி' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார். இப்படத்தினைத் தொடர்ந்தே இவர் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக் கொண்டார்.

அதன் பின்னர் 'மான் கராத்தே, யாம் இருக்க பயமேன், ஆண்டவன் கட்டளை' என அடுத்தடுத்து அவர் கமிட்டாகி நடித்த படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை கொடுத்தது. முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த யோகி பாபுவிற்கு 'காக்கா முட்டை' என்ற திரைப்படம் தான் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மான் கராத்தே' திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார்.

இன்றயை காலகட்டத்தில் யோகி பாபு இல்லாத புதிய படங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு தனது நடிப்பின் திறமையினால் பல படங்களைத் தன் வசப்படுத்தி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது விஜய்யின் 'வாரிசு', 'பூமர் அங்கில்' ஆகிய படங்களில் நடித்து வரும் நம்ம யோகி பாபுவை பற்றி சுவரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதாவது இதுவரை எந்த ஒரு முன்னணி நட்சத்திரமும் செய்யாத ஒரு சாதனையை நடிகர் யோகி பாபு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அது என்னவென்றால் தற்போது யோகி பாபு கமிட்டாகி நடித்து வரும் திரைபடங்கள் மட்டுமே சுமார் 39 படங்கள் என சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரும் 39 படங்களை கமிட் செய்து வைத்து நடித்ததே இல்லை. எனவே யோகி பாபுவிற்கு இவ்வாறான ஒரு யோகம் அடிச்சிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்து மழையினைப் பொழிந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement