• Mar 28 2024

கேர்ள் ஃபிரண்டாக நீ எனக்கு ஊட்டி விடமாட்டியா?- குயின்சியிடம் எல்லை மீறும் அசீம்- என்ன தான் நடக்குத இங்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆகி கடந்த ஞாயிறன்று வெளியேறினார். அதேபோல் ஜிபி முத்துவும் விலகிவிட்டதால், தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு ரகமாக உள்ளனர்.அசல் கோளாறு பெண் போட்டியாளர்களை தடவுவதையே வேலையாக வைத்துள்ளார். ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவுக்கு ரூட்டு விட்டு வருகிறார்.இந்நிலையில் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் அசீம். 


அதாவது  பிக்பாஸ் வீட்டில் அசீம் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லிவிங் ஏரியாவில் அசீம், அமுதவாணன், தனலட்சுமி, நிவா ஆகியோர் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்குவரும் குயின்ஸி, சாப்பிட்டியா என அசீமிடம் கேட்டுவிட்டு தான் எடுத்து சாப்பிடுகிறார். இதை பார்த்த அசீம் ஒரு பாய்ஃபிரண்ட் உட்காந்திருக்கிறேன்... எனக்கு ஊட்டிவிடாமல் நீ எடுத்து சாப்பிடலாமா? ஒரு கேர்ள் ஃபிரண்டாக நீ எனக்கு ஊட்டி விட்டிருக்க வேண்டும் அல்லவா என வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்.


ஆனால் குயின்ஸி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அசீமை கன்னாபின்னாவென திட்டி தீர்க்கின்றனர். ஏற்கனவே விவாகரத்தான அசீம், சீரியல் நடிகையான ஷிவானி நாராயணனை காதலித்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement