• Feb 02 2023

அடுத்த சீசனில் இருந்து வரமாட்டேன்- பிரபல இயக்குநரால் பிக்பாஸை கை விடும் நடிகர் கமல்ஹாசன்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரமாண்டமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியினை ஆறு சீசன்களாக கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவருகின்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாப்புலர் கிடைத்திருக்கின்றது.

மேலும் இது ஒரு புறம் இருந்தாலும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இதனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறார் என்றும் பெரும்பாலும் அடுத்த சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என்றும் கூறப்படுகின்றது.


 இந்நிலையில் தான் கமல் ஹாசன் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.கமல் ஹாசன் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அதாவது அவர் நடிப்பில் அடிக்கடி படங்கள் ரிலீஸாக வேண்டும் என்பதே ஆண்டவர் ரசிகர்களின் கோரிக்கை ஆகும். இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்கிவிட்டார்கள். 

மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கமல். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கிறார். இது தவிர்த்து எச். வினோத், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் கமல் ஹாசனை தேடி அந்த மெகா பட வாய்ப்பு வந்திருக்கிறது.


மகேஷ் பாபுவை வைத்து தான் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைக்க விரும்பினார் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி என்று கூறப்பட்டது. இந்நிலையில் கமலை வைத்து தனியாக படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பாக ஹைதராபாத்தில் கமலும், ராஜமௌலியும் சந்தித்து பேசிக் கொண்டார்களாம். அந்த ரகசிய சந்திப்பில் பட விபரங்களை தெரிவித்தாராம் ராஜமௌலி.


கமல் ஹாசன் பிக் பாஸை கைவிட ராஜமௌலி தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அவர் கேட்கும் அளவுக்கு மொத்தமாக டேட்ஸ் கொடுக்க வேண்டும். படத்தை பார்த்து பார்த்து எடுப்பார் என்பதால் ஷூட்டிங் சீக்கிரம் முடியாது. ராஜமௌலிக்கு மொத்தமாக டேட்ஸ் கொடுக்க வசதியாகத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குட் ஃபை சொல்கிறார் கமல் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement