• Apr 25 2024

முக்கிய விருதை வென்று.. ஆஸ்கார் விழாவில் மாஸ் காட்டிய 'அவதார் 2'.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' படத்தின் உடைய முதல் பாகம்  கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் உடைய வெற்றியைத் தொடர்ந்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் 'அவதார் 2' வெளியானது. 


இப்படமானது வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது மட்டுமல்லாமல் கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டியதோடு பார்வையாளர்களுக்கும் நல்ல அனுபவமாக அமைந்தது. மேலும் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில்  அவதார் 2 படம் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படும் நிலையில் அவதார் படத்தின் 2 ஆம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படம் சிறந்த படம் , சிறந்த காட்சியமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒலி ஆகிய பிரிவுகளில் போட்டியிட்டது. இதில் சிறந்த காட்சியமைப்பு (Visual Effects) என்ற பிரிவில் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.


இதனையடுத்து இப்படத்தினுடைய படக்குழுவினருக்கு திரையுலகில் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement