• Apr 25 2024

சிக்கலில் மாட்டிய 'விக்ரம்' படக்குழு…படத்திற்கு தடை விதிக்கப்படுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலே ரசிகர்களிடத்தே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். விஜய்யின் 'பிகில்' படத்துடன் நேரடியாக மோதிய இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தால் மெஹா ஹிட் அடித்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் இந்தப்படத்திலிருந்து வெளியான அனிருத் இசையில் கமல் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. 'ஆழ்வார் பேட்டை ஆண்டவா' பாடலை போல சென்னை ஸ்லாங்கில் கமல் பாடி அசத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. குறிப்பாக ஒன்றிய அரசை விமர்சித்து, "கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது… தில்லாலங்கடி தில்லாலே..
தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என்ற வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு , ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் "குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே" என்ற வரிகள் இருப்பதாகவும், இந்த வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் ’விக்ரம்’ படத்துக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து 'பத்தல பத்தல' பாடல் மெஹா ஹிட் அடித்துள்ளது.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement